| 7 comments ]


அறிமுகம்

சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்து, பின் பிரான்சின் பலகணி என்று சொல்லப்படும் புதுவையில் வளர்ந்தேன். கணினித்துறையில் பணி என்பதால் பெங்களூரில் சில காலம் கழித்துவிட்டு தற்போது சென்னையில் குடியேறியாகிவிட்டது.

கூட்டுப்புழுவாய் என் சிறு உலகத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தேன். சமூக கோபங்களும், சமூகம் குறித்தான எண்ணங்களும் இருந்த போதிலும் பெரிதாக அதை வெளிப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் இருந்ததில்லை. அல்லது பெரிதாக நான் முயன்றதில்லை. வலையுலக அறிமுகம் கிடைத்த பின் தான் என் உலகம் சற்று விரிய தொடங்கி இருக்கிறது. ஒத்த கருத்துடைய நண்பர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாள் தோறும் புதிதாக எதோ ஒன்றை கற்று கொண்டிருக்கிறேன். மனித மனங்களின் அழகையும், வக்கிரங்களையும் ஒரு சேர நாள் தோறும் எங்கேனும் காண கிடைத்து கொண்டே தான் இருக்கிறது.

இலக்கிய உலகம் கடலேனில் அதன் ஒரு கரைக்கு வெளியே நின்று கொண்டு அதன் அழகை கண்டு ரசிக்க துடித்து கொண்டிருக்கிறேன். அவ்வப்போது ஆசையில் அதில் கால் நனைக்க நினைப்பதுண்டு. ஆனாலும் இன்னும் இறங்கி குளிக்கவும், அதன் ஆழங்களை அலசவும் முயன்றதில்லை. இன்னும் நிறைய காலம் தேவைப்படலாம்.

இந்த நட்சத்திர வாரத்தில் என் வலைப்பக்கங்களில் எழுதிப்பகிர என்ன காத்திருக்கிறது என்று தெரியவில்லை. மொழியோடு பயணிக்கும் என் பாதையில் இதொரு வசந்த காலமாய் இருக்கவும் செய்யலாம்.
வலைப்பூ சுட்டி

7 comments

Venkatesh said... @ June 7, 2009 at 6:39 PM

நட்சத்திர வாழ்த்துகள் பிரேம்

வெங்கடேஷ்

ஆ.ஞானசேகரன் said... @ June 7, 2009 at 11:06 PM

நட்சத்திர வாழ்த்துகள்

ஆபிரகாம் said... @ June 7, 2009 at 11:53 PM

வாழ்த்துக்கள்!

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said... @ June 8, 2009 at 12:12 PM

அன்புத் தோழருக்கு,

திரட்டியின் நட்சத்திரப் பதிவராக தேர்வுச் செய்யப்பட்டமைக்கு என் வாழ்த்துக்கள்.

ச.பிரேம்குமார் said... @ June 8, 2009 at 5:14 PM

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி :)

முனைவர் கல்பனாசேக்கிழார் said... @ June 8, 2009 at 10:23 PM

வாழ்த்துக்கள்.

ச.பிரேம்குமார் said... @ June 8, 2009 at 11:28 PM

//அன்புத் தோழருக்கு,

திரட்டியின் நட்சத்திரப் பதிவராக தேர்வுச் செய்யப்பட்டமைக்கு என் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி அண்ணா. உங்கள் வாழ்த்து மிகுந்த மகிழ்ச்சி கொள்ள செய்தது

Post a Comment