என்னைப்பற்றிய அறிமுகக்குறிப்பு:
தொழில்நுட்பம் படித்துத் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றியவன். தமிழில் முதுகலை தேறியவன். இதழியல் மக்கள் தொடர்பியல் படித்தவன்.
தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழ் 'தென்மொழி'யின்' ஆசிரியர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் தந்த ஊக்கத்தால் முதலில் அறிவியல் கட்டுரைகள் எழுதினேன். அக்கட்டுரைகள் தென்மொழி இதழில் வந்தன.
முனைவர் ஆபிரகாம் கோவூர் எழுதிய நூலின் பகுதிகளை மொழியாக்கம் செய்தவன். அவை புதுச்சேரியில் முன்னர் வெளிவந்த "மதி" இதழிலும் "திண்ண", "கீற்று" ஆகிய மின்னிதழ்களிலும் வந்தன.
helicopter - ஐத் "திருகிறக்கை ஊர்தி" என்று பெயர்த்து எழுதியதற்காகத் தேவநேயப்பாவாணர் ஐயா அவர்களால் பாராட்டப்பெற்று மகிழ்ந்தவன்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்ட "அருங்கலைச் சொல் அகராதி" (Dictionary of technical terms)ப் பணியில் துணையிருந்த முகன்மையானவர்களுள் ஒருவன்.
தென்மொழி, தெளிதமிழ், நற்றமிழ் இதழ்கள் தந்த ஊக்கத்தால் மரபு பாடல்கள் எழுதுகிறவன். தனித்தமிழ் தொடர்பான கட்டுரைகளும் தனித்தமிழ் எதிர்ப்பாளர் கருத்துகளுக்கு தக்க மறுமொழி கூறும் கட்டுரைகளும் நூல் ஆய்வும் பிறவும் "திண்ணை"யில் எழுதியிருக்கின்றேன்.
நற்றமிழ் இதழின் உறுப்பாசிரியப் பொறுப்பில் இயன்றவரை பணியாற்றுகிறேன்.
தமிழ் வலைப்பதிவு பற்றிப் புதுவையில் நடந்த பயிலரங்கில் பயின்றவன்.
விழுப்புரத்தில் அதைப்போன்ற பயிலரங்கை நண்பர்களின் உதவியோடு நடத்தியவன். நவம்பர் 2007 இல் (http://thamizhanambi.blogspot.com) என்ற வலைப்பதிவு தொடங்கி தொடர்ந்து எழுதி வருகிறேன். அறுபதுக்கு மேற்பட்ட பதிவுகள் தந்திருக்கிறேன்.
தமிழ் தமிழர் நலன் குறிப்பாக ஈழத்தமிழர் நலன்காக்க எழுதியவற்றை என் வலைப்பதிவில் காணமுடியும்.
[12:14 AM
|
3
comments
]
3 comments
அன்பார்ந்த தமிழ் வலைப்பதிவு உலகின் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் வணக்கம்.
கடந்த 23 மாதங்களாக என் வலைப்பதிவில் எழுதி வருகின்றேன்.
எனக்குத் தெரிந்த வற்றையும், எனக்குச் சரி என்று பட்டவைகளையும், நான் கண்டிக்க விரும்பியவற்றையும் என் வலைப்பதிவில் கட்டுப்பாடில்லா உரிமையுடன் ஒரு எல்லைக்குள் இருந்து எழுதி வந்திருக்கின்றேன்.
பல பதிவுகளைப் படித்தோர் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர்.
27-7-2009 முதல் தொடங்கிய இந்தக் கிழமையின் சிறப்புப் பதிவராக, "திரட்டி" என்னைத் தேர்ந்தெடுத்து அறிவித்து ஊக்கம் அளித்துள்ளமைக்கு என் நெஞ்சங் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என் பதிவுகளைப் படித்து வெளிப்படையாகப் பாராட்டிய நல்லுள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!
படித்து, பாராட்டி எழுதித் தெரிவிக்க நேரமின்றிச் சென்ற அனைவர்க்கும் அன்பார்ந்த நன்றி.
தமிழ் வலைப் பதிவுகள் இன்னும் ஆக்க அடிப்படையில் செயற்பட்டுச் சிறப்புற வேண்டும் என்ற விழைவோடு வாழ்த்துக்களைத் தெரிவித்து விடை பெறுகின்றேன்.
அன்பன்,
தமிழநம்பி.
தக்க சமயத்தில் கிடைத்த,-நல்ல
தரமான திரட்டியின் பாராட்டு,
வளமாரப் போற்றிப் பாராட்டுவோம்! -நீங்கள்
வளமுடன் நீழுழி வாழ வாழ்த்துவோம்!
ஐயா தமிழநம்பி வாழ்த்துக்கள்
Post a Comment