| 6 comments ]


எனது பெயர் க.வேலன். சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றம் எனது ஊர்.திருக்கழுக்குன்றம் பற்றி சொல்வதென்றால் நண்பகலில் தினம் இரண்டு கழுகுகள் வந்து உணவருந்தி செல்லும்.மற்றும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்குள்ள குளத்தில் சங்கு பிறக்கும்.மேலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு கன்னிராசியில் பிரவேசிக்கும் நேரத்தில் இங்கு லட்சதீபம் நடக்கும். உடல் தானத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி தனது உடலையே தானமாக அளித்த இதயே ந்திரன் இந்த ஊர்தான். +2 முடித்து டிப்ளமா இன் டூல் இன்ஜினியரிங். படித்து முடித்ததும் எனக்கு சென்னையில் வேலை கிடைத்தது. எங்களது பேட்சில் முதலில் வேலைக்கு சென்றது நான்தான். அதுபோல் முதலில் வேலையை விட்டுவந்ததும் நான்தான். எனது தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஊர் திரும்பி சொந்தமாக தொழில் செய்யத்தொடங்கினேன்.. எனது துணைவியாரின் பெயர் மீரா.எனக்கு ஒரு மகள் ,ஒரு மகன். மகள்-ப்ரியா டிப்ளோமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். மகன்-ராஜராஜன் நான்காம் வகுப்பு படித்து வருகின்றார்.இணையத்தில் வரும் பதிவுகளை பற்றி எனது சகோதரர் திரு.மூர்த்தி அவர்கள் கூறினார். சரி நாமும் இணையத்தில் பதிவிடுவோம் என எண்ணி கடந்த 13.12.2008 -ல் பதிவிட ஆரம்பித்தேன். ஆரம்ப பதிவுகளில் எதைப்பற்றி எழுதுவது என தெரியாமல் பொது விஷயங்களை பதிவிட தொடங்கினேன்.. நான் கணிணி வாங்கிய புதியதில் அடிக்கடி ஏற்படும் ஒரு சின்ன சந்தேகங்களை சரியாக விளக்க ஆள்இல்லை.

நமக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் புதிதாக கணிணி உபயோகிப்பவர்களுக்கு ஏற்பட கூடாது என்கிற எண்ணத்தில் எனக்கு தெரிந்தவற்றை பதிவிட ஆரம்பித்தேன். அதைப்போல் போட்டோஷாப் பாடமும்.நிறைய பேர்
போட்டோஷாப் வைத்திருந்தாலும் அதை சரியாக உபயோகப்படுத்துவதில்லை.அந்த பாடமும் பதிவிட ஆரம்பித்தேன். அதைப்போல் ஆங்கில பாடமும். எனக்கு கிடைத்த ஆங்கில சிடி பாடத்தை மற்றவர்களும் பயன்படுத்தட்டும் என பதிவிட ஆரம்பித்தேன்.
ஜனவரி 20 ம்தேதியிலிருந்து வருகையாளர்கள் எண்ணிக்கையை போட்டேன். இதுவரை சுமார் 24,000 பேர் வருகை தந்துள்ளனர். சுமார் 160 பேர் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர். எனது பதிவின் படைப்புக்களை தமிழ்கம்யுட்டர் இதழில் வெளியிட்டுவருகின்றனர்..பதிவின் மூலம் பதிவர்கள் திரு.ஆனந்தன்,திரு.முத்துக்குமார்,திரு.சங்கர நாராயணன்,திரு.தியாகராசன்,
திரு.ஜெய்காந்த்,திரு.வடிவேலன்,திரு.சூர்யா ஆகிய இனியநண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.(அனைத்தும் அவர்கள் உண்மைப்பெயரே) எந்த கெட்டபழக்கமும் இல்லாதது எனது கெட்டபழக்கம்.எனது தொழில் செய்வதற்கு என் குடும்பத்தார் உறுதுணையாக இருப்பதால் தினம் எனக்கு கிடைக்கும்ஒய்வுநேரத்தில் பதிவிடுகின்றேன். புதிது புதிதாக பதிவிட வேண்டியிருப்பதால் மற்றவர்களின் பதிவுகளுக்கு என்னால் கருத்துரையிடமுடிவதில்லை.குறுகிய காலத்தில் எனக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்த திரட்டி.காம்.க்கு எனது நன்றிகள்.
எனது வலைப்பக்க முகவரி:--http://velang.blogspot.com/

6 comments

Tech Shankar said... @ July 12, 2009 at 11:20 AM

Congrats Dear Velan Sir

டவுசர் பாண்டி said... @ July 12, 2009 at 12:39 PM

வன்டம்பா !! நா தான், டவுசரு பாண்டி,
இன்னாடா, பேரே கொஞ்சம் பேஜாரா கீதே?
மன்சன், எப்பிடி இன்னு நெனைக்காதே,
வாஜாரே !!

எனுக்கு, இந்த மேரி அல்லாம் இந்த
ஒலகத்துல கீதுடா , டவுசரு நீ கூட பிளாக்குல எழ்தலாம்,
யாருக்கும் ஒன்னியும் பிரியாது, இன்னு சொல்லி எனுக்கு, காதுல வியராமேரி,
( அப்பால அவுருக்கு காதே கேக்கல, அது வேற கத ) சொன்னது, எங்க
வேலன் வாஜார் தாம்பா, அவர இந்த வார இஸ்டாரு இன்னு தேர்ந்து எட்த்த திரட்டிக்கு ஒரு சலாம்.

அவுரு பண்ண ஒரே தப்பு ? ? ?
அதாம்பா, என்னப்போய் எதாவது பிளாக்குல, எழ்துடா டவுசரு இன்னு
சொன்னாரே !! அதாம்பா.
வாழ்க வேலன் வாஜார் . வளர்க திரட்டி புகழு
( ^ _ ^ )( ^ _ ^ )( ^ _ ^ )

யூர்கன் க்ருகியர் said... @ July 13, 2009 at 1:07 AM

Congartulation for Velan sir and Thanks for Thiratti.com.

யூர்கன் க்ருகியர் said... @ July 13, 2009 at 1:11 AM

//என்னப்போய் எதாவது பிளாக்குல, எழ்துடா டவுசரு இன்னு
சொன்னாரே !! //

Mr.tavusar pandi brother,

naan ungal rasigan.

Praveenkumar said... @ July 17, 2009 at 6:00 AM

வாழ்க வேலன் வாஜார் . வளர்க திரட்டி புகழு
வாழ்க டவுசர் பாண்டி...
வாழ்க தமிழ்நெஞ்சம்....
வாழ்க யூர்கன் க்ருகியர்.....
வாழ்க shirdi.saidasan@gmail.com

கண்ணகி said... @ July 29, 2009 at 5:05 AM

velan ungal pathivukal ennaip ponra puthiyavarkalukku mikavum uthavi aaka irrukkrathu.

Post a Comment