| 12 comments ]

சிந்தனையாளனாகவும் எழுத்தாளனாகவும் உருவாக்கிக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் தாம் வலைப்பூக்களில் எழுதி வருபவை. 2005 ஆம் ஆண்டில் இருந்து எழுதி வந்தாலும் எழுத்துத்திறமை மேலும் பளிச்சிட இன்னும் அதிக முயற்சி எடுக்கவேண்டும் என்ற உத்வேகத்தை தூண்டி விடும் விதமாக இந்தத் திரட்டித் தளத்தின் நட்சத்திர வாய்ப்பு அமைவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.


மனதில் உருவாகும் பயங்களையும் உறவுகளின் பிரிவுகளினால் வரும் வலிகளையும் வேதனைகளையும் முறையே திகில் கதைகளாகவும் காதல் கதைகளாகவும் மாற்ற அவ்வப்போது முயற்சி செய்வது உண்டு. அப்படி இப்படி என இந்த நான்கு வருடங்களில் கிட்டத்தட்ட 120 கதைகள் எழுதி ஆகிவிட்டன. கிரிக்கெட் ஆட்டம் பெண்ணாக இருந்திருந்தால் , அவளைக் காதலித்து திருமணம் செய்திருப்பேன். கிரிக்கெட்ட்டைப் பற்றி சிலப் பதிவுகள் உண்டு. கடவுள் மறுப்பு எனச் சொல்லமுடியாது, ஆனால் கடவுள் நம்பிக்கை வாழ்வீல் அவசியம் இல்லாத ஒன்று என நம்பும் மனிதர்களுள் நானும் ஒருவன். பெரியாரைச் சிறுக சிறுக மனதினுள் வரித்துக்கொள்ள முயன்றுக் கொண்டிருக்கின்றேன். தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று நாடில்லை என்றக் கூற்று என் காலத்திலாவது உடைபடுமா என ஏங்கும் கோடிக்கணக்கான தமிழர்களுள் ஒருவன்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பிறந்து, காவிரிக்கரை திருச்சியில் பள்ளி பயின்று, மதுரையில் பொறியியற் பயின்று சென்னையில் சிலப் பல வருடங்கள் பணி செய்து தற்பொழுது சுவீடனில் மேற்படிப்புப் படித்துக் கொண்டிருக்கும் நான் இந்த நட்சத்திர வாய்ப்பில், ஆரம்ப காலத்தில் ஊக்குவித்த ஆதரித்த தலையில் குட்டியப் பதிவர்கள் குறிப்பாக முத்து தமிழினி, பாலபாரதி,குழலி, டிபிஆர் ஜோசஃப், பொன்ஸ், மா.சிவக்குமார், தமிழோவியம் கணேஷ் சந்திரா, பாஸ்டன் பாலா, சிவஞானம்ஜி, ஆசிப் மீரான் வலைப்பதிவின் தொழில்நுட்ப ஐயங்கள் வரும்பொழுதெல்லாம் உடனுக்குடன் பதில் அளிக்கும் எ-கலப்பை முகுந்த், ரவிஷங்கர், திகில் கதைகள் எழுதும்போதெல்லாம் “ஆவி அனானிகளாக” வலம் வந்து ‘ஆட்டுவித்த ‘நாமக்கல் சிபி', நல்ல கதை என்றால் பின்னூட்டத்துடன் ஆஜராகும் இலவசக்கொத்தனார், ஜிரா, லக்கிலுக், துர்கா, திவ்யா , டிபிசிடி, செந்தழல்ரவி,பைத்தியக்காரன், உண்மைத்தமிழன் என நேரிடையாகவோ மறைமுகமாகவோ என் கதை சொல்லும் திறனை மேன்மைப்படுத்தும் அனைவருக்கும் எனது நன்றிகளைச் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.

பன்புடம்
‘வினையூக்கி' செல்வா

12 comments

வாழவந்தான் said... @ August 4, 2009 at 5:39 AM

வாழ்த்துக்கள்!!!

சிவாஜி சங்கர் said... @ August 11, 2009 at 3:04 AM

வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்!!!

Ulavan said... @ August 13, 2009 at 8:34 AM

வாழ்த்துக்கள் மீண்டும் (SwissTamilan)

VISA said... @ August 15, 2009 at 10:22 PM

இந்த வார நட்சத்திரம் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பிளாகை இனி மேல் தான் படிக்க போகிறேன்.

kbm said... @ August 16, 2009 at 6:32 AM

Vaalthukkal Selva..!! ;)

முனைவர் கல்பனாசேக்கிழார் said... @ August 17, 2009 at 12:17 AM

வாழ்த்துக்கள்.........

சங்கரின் பனித்துளி நினைவுகள் said... @ November 17, 2009 at 3:44 AM

வாழ்த்துக்கள் தோழரே !!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said... @ January 28, 2010 at 3:23 AM

வாழ்த்துகள்.

Tamilparks said... @ March 14, 2010 at 11:34 PM

வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said... @ September 14, 2010 at 4:06 PM

வாழ்த்துக்கள்!!!

seenu said... @ November 9, 2010 at 5:54 AM

Congrats my dear brother

Thamizhamudhan said... @ September 6, 2012 at 5:28 AM

தமிழுகென்று நாடு வேண்டும் என நினைப்பதும்... பெரியாரின் கோட்பாடுகளை உள்வாங்க நினைப்பதும்.... முரணானது அல்லவா?
பெரியார் கொள்கைகள் தமிழ் தேசியத்திற்கு எதிரானவராக இருக்கும் பொழுது...............

Post a Comment