என் பெயர் என்.உலகநாதன். நான் லால்குடியைச் சேர்ந்தவன். என்னுடைய கல்வி தகுதி MCOM, AICWA, ACS Final. நான் கடந்த 12 வருடங்களாக மலேசியாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் Finance Controller ஆக வேலை பார்த்து வருகிறேன். நான் சிறு வயதிலிருந்தே கவிதை, துணுக்கு,கேள்விகள் என அனைத்து பத்திரிக்கைகளிலும் எழுதியிருக்கிறேன். நான், நண்பர்களுடன் "சலங்கை" எனும் பத்திரிக்கை நடத்தியுள்ளேன். காலேஜ் மேகசினில் ஆசிரியர் குழுவில் இருந்துள்ளேன். கல்லூரியில் நடந்த சிறு கதை போட்டிகளில் பரிசு பெற்றுள்ளேன். என்னுடைய கதை கல்லூரி மேகசினில் வெளி வந்துள்ளது.
படிப்பு மற்றும் அலுவல் காரணமாக பல வருடங்கள் காரணமாக எழுதாமல் இருந்த நான் மீண்டும் இப்போது எழுத துவங்கி உள்ளேன். நான் எழுதிய முதல் கதையே 17.06.09 தேதியிட்ட ஆனந்த விகடனில் சென்னை எடிசனில் வெளி வந்துள்ளது. நான் இப்போது நிறைய கதைகள் எழுதி வருகிறேன். என் வலைத் தளத்தில் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
நான் மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவன். தினமும் காலையில் நடை பயிற்சி, யோகா மாலையில் 1 மணி நேரம் ஜிம் செய்பவன். வாரத்தில் ஒரு நாள் விரதம். வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால் ஆண்டவன் நல்ல உடல் நிலையோடு என்னை வைத்திருக்கிறான் என நம்புகிறேன்.
நான் ஒரு கிரிக்கெட் வீரனாக ஆக ஆசைப்பட்டேன், பிறகு நல்ல பாடகராக ஆசைப்பட்டேன். கடைசியில் நன்கு படித்தால் மட்டுமே உறுப்பட முடியும் என நினைத்து நன்றாக படித்தேன்.
என் அப்பா அம்மா எப்படி என்னை வளர்த்தார்களோ அதே நல்ல பழக்க வழக்கங்களுடன் என் பிள்ளைகளை வளர்க்க முயன்று வருகிறேன்.
என்னுடைய வலைத்தளத்தில் என் அனுபவங்களைக் கொண்டு மிக நல்ல கட்டுரைகளை மட்டுமே வெளியிட வேண்டும் என நினைத்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்னுடைய வலைத்தளம் : www.iniyavan.com
என்னுடைய வலைத்தளம் : www.iniyavan.com
2 comments
நட்சத்திர வாழ்த்தகள்!!
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே.........
Post a Comment